Wednesday, April 23, 2008

தலைவர் சிலைகளுக்கு அரசு பாதுகாப்புகொடுக்க வேண்டும், திராவிடர் தலைவர் கோரிக்கை


தலைவர்களின் சிலைகளை அரசுதான் பாதுகாக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள தேவர் சிலையை சிலர் இழிவுபடுத்தியிருப்பது தமிழ்ப் பண்பாட்டுக்கு விரோதமானது என்று சாடியுள்ளார்.

இந்தச் செயலைத் தொடர்ந்து ஏற்பட்ட சம்பவங்களால், மதுரை வட்டாரத்தில் பொது மக்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தலைவர்களின் சிலைகளை வைப்பதற்கு அரசுதான் அனுமதி அளிக்கிறது; எனவே, அரசுதான் தலைவர்களின் சிலைகளைப் பாதுகாக்கவும் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மதுரையில் சம்பவம் நடந்தவுடன் அந்தப் பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தி பாதுகாப்பு அளித்திருந்தால் தடியடி நடத்தும் அளவுக்கு காவல்துறை செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Thursday, April 10, 2008

கூட்டு குடிநீர் திட்டத்தை வலியுறுத்தியும்,விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும் மாநிலம் முழுவதும் நடந்த போராட்ட விவரங்கள்...


தர்மபுரி ஏப்ரல் 10:

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார். தர்மபுரி மாவட்ட செயலாளர் டாக்டர் வி.இளங்கோவன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் வி.சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

"கர்நாடக தேர்தல் முடியும் வரை குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற ஏன் காத்திருக்க வேண்டும்' என்றும்,

மத்திய,மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறி விட்டன. வேலை வாய்ப்பை உருவாக்க ஊழலை கட்டுப்படுத்த வேண்டும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளனர். வசதி படைத்தோர், பணம் கொடுத்து வேலை பெறுகின்றனர். இது குறித்து சட்டசபையில் பேசினால், பதில் கிடைக்கவில்லை.

"வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்' என்று பெருமையாக பேசுவதுண்டு. இங்கே நிலைமையை பாருங்கள். சொந்த ஊரில் வேலைவாய்ப்பு இன்றி தர்மபுரி மாவட்ட மக்கள் வெளிமாநிலங்களுக்கு செல்லும் நிலையுள்ளது.அண்டை மாநிலங்களுடன் முல்லை பெரியாறு, பாலாறு, காவிரி ஆறு சம்பந்தமான பிரச்னைகள் உள்ளன. மத்திய அரசு இதைக் கண்டிப்பதில்லை. ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு 1998ல் ஒப்பந்தம் செய்து, பெங்களூருக்கு குடிநீர் கொண்டு சென்று விட்டனர். பத்தாண்டுகளாக நாம் என்ன செய்தோம். ஒகேனக்கல் பிரச்னையில் "தமிழர் உயிர் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக, கர்நாடக தேர்தல் வரையில் அமைதி காப்போம்' என முதல்வர் கூறியுள்ளார். இதில் அனைத்து கட்சிகளையும் அழைத்து பேசியிருக்கலாம்.


மழை பாதித்த போது, எதிர்க்கட்சிகளை அழைத்து கருத்து கேட்கவில்லையா. ஒகேனக்கல் பிரச்னையில், "யார் நிர்பந்தம் காரணமாகவும் சொல்லவில்லை' என, முதல்வர் தெரிவித்தார். வீரப்ப மொய்லி மறுநாளே, "சோனியா கேட்டு கொண்டதால் திட்டம் நிறுத்தி வைத்திருப்பதாக' கூறுகிறார். மக்களை ஏமாற்றும் அரசுகள் நடந்து வருகின்றன.வார்த்தை ஜாலத்தால் தமிழக மக்களை முதல்வர் ஏமாற்றி வருகிறார். மக்களை ஏமாற்றும் அரசே நடந்து வருகிறது. ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு ஜப்பான் நாட்டில் தான் நிதி பெற வேண்டுமா. கர்நாடக தமிழர்கள் வாழ்வதற்கு ஏற்ப, மாற்றி கொண்டனர். கர்நாடக தேர்தல் வரை திட்டத்தை நிறைவேற்ற ஏன் காத்திருக்க வேண்டும். மத்திய அரசின் ஆதரவான கவர்னர் ஆட்சி தானே கர்நாடகாவில் நடக்கிறது. 1971ல் காவிரி நீர் பங்கீட்டில் இடைக்கால தீர்ப்பு வந்த போது, கர்நாடகாவில் தேர்தல் வந்தது. அப்போதைய முதல்வர் கருணாநிதி, நீதிமன்றத்துக்கு செல்வதை இந்திராகாந்தி தடுத்தார். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் தற்போது சோனியா தடுத்துள்ளார். மாமியார், மருமகளுக்காக தமிழக மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.

நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் குடிநீர் திட்டம் கிடைக்காது. அரசுகளும், தேசிய கட்சிகளும் மக்களை எப்படி ஏமாற்றி வருகின்றனர் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த போராட்டம். திட்டத்துக்கு கர்நாடகாவில் கிருஷ்ணாவும், எடியூரப்பாவும், தேவகவுடாவும் எதிர்ப்பு தெரிவிக்கும் போது, ஆட்சிக்கு வந்தால் எப்படி அவர்கள் ஒப்புதல் அளிப்பார்கள்.தேசிய கட்சிகளுக்கு ஓட்டு போடாதீர்கள். சிறப்பு பொருளாதார மண்டலம், விமானநிலையம் விரிவாக்கம் என கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு பயந்து அரசு பின் வாங்கி வருகிறது. பதவியை தக்க வைத்து கொள்ள நிர்பந்ததுக்கு கட்டுப்பட்டு வருகிறது. இவ்வாறு தலைவர் விஜயகாந்த் பேசினார்.

மேலும்
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட விஷயத்தில் மத்திய-மாநில அரசுகள் நாடகமாடுகின்றன. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புளோரைடு என்ற நச்சுத்தன்மை கலந்த தண்ணீரை மக்கள் குடித்து எலும்பு, பல், கண் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் தவித்த வாய்க்கு தண்ணீர் தானே கேட்கிறார்கள். வேறு என்ன ஆட்சியாளர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள்? ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் என்பது இந்த மாவட்ட மக்களின் ஜீவாதாரம். அது ஏன் மறுக்கப்படுகிறது?.

பால்,பேருந்து கட்டணம்,காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது..மறைமுகமாக பேருந்து கட்டணம் உயர்த்தபட்டுள்ளது,தமிழக அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்,தொடக்க கல்வியில் 64 இலட்சம் குழந்தைகள் படித்தபோதும் ,12 ம் வகுப்பு பொதுத்தேர்வை 11 இலட்சம் மாணவர்கள் தான் எழுதுகின்றனர்,எனவே சமச்சீர் கல்விமுறையை கொண்டுவருவது அவசியமாகும்,

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. புதிய ரத்தம், புதிய சிந்தனைகளுக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும். தேசிய கட்சிகளை நம்பாதீர்கள். ஒரு தடவை ஆட்சி மாற்றத்தை மத்தியிலும், மாநிலத்திலும் ஏற்படுத்துங்கள். தேசிய கட்சிகளுக்கு ஓட்டு போட்டு போட்டு நாம் ஏமாந்து விட்டோம். மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். சரியான தலைமையை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்

இவ்வாறு புரட்சிக்கலைஞர் திராவிடன் விஜயகாந்த் பேசினார்.சென்னை ஏப்ரல் 10:
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை உடனே நிறைவேற்ற கோரியும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தினர் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தே.மு.தி.க. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில இளைஞர் அணி துணை செயலாளர் கு.நல்லதம்பி முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது:-

ஒகேனக்கல் திட்டம்

ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம் 1998-ல் கர்நாடகத்தால் ஒப்பு கொள்ளப்பட்ட திட்டம். கடந்த 10 ஆண்டுகளாக தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தும் திட்டத்தை நிறைவேற்றவில்லை. கர்நாடகாவில் உள்ள சில அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் இப்போது இந்த திட்டத்தை நிறைவேற்ற கூடாது என்கிறார்கள். குடிக்கும் தண்ணீரை கூட, தர மறுக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசு கன்னட வெறியர்களின் கோரிக்கைகளை ஏற்று, திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. இந்த பிரச்சினையை தலையிட்டு தீர்க்க வேண்டிய மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்களுக்கு குடிதண்ணீர் கிடைக்கும் திட்டம் கேள்விக்குறியாகியுள்ளது.

தமிழக மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நம்பிக்கை நட்சத்திரம் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். மக்களின் பிரச்சினைகளுக்காக போராடும் கேடயம் தே.மு.தி.க. இந்த கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக மக்களிடையே கட்டாயம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார்.

Sunday, April 6, 2008

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கா தர்மபுரியில் தேமுதிக வரும் 10ம் தேதி எழுச்சி ஆர்ப்பாட்டம்தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் ஆளும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து வருகின்ற 10ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்கள் அலுவலகம் முன்பு தேமுதிகவின் சார்பில் எழுச்சி ஆர்ப்பாட்டங்கள் அந்த அந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நடக்க உள்ளதாக தேமுதிக பொது செயலாளர் திரு.இராமு வசந்தன் தெரிவித்தார்,

மேலும் கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் தலைவர் திராவிடர் கேப்டன்விஜயகாந்த் தலைமை தாங்குவார் எனவும்,

மாநில நிர்வாகிகள் , சார்பு அணிகள்,தலைமக்கழக பேச்சாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றுவார்கள் என்றும் கூறினார்.

Friday, April 4, 2008

வணக்கம் தோழர்களே...தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவோம்